
latest news
விஜய் மேல தப்பே இல்ல!..இவ்ளோ பேர் இறந்து போனதுக்கு இதுதான் காரணம்!.. பொங்கும் கரூர் மக்கள்!..
Karur: தவெக தலைவர் விஜய் நேற்று கரூர் சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மதியம் 3 மணிக்கு
நாமக்கல்லில் பேசி முடித்த விஜய் இரவு 7 மணி அளவில் கரூர் வந்தார். தவெக சார்பில் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை சார்பில் வேலுச்சாமிபுரம் பகுதியில் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பகுதி மிகவும் குறுகலான பகுதி என கரூர் மக்கள் சொல்கிறார்கள்.
விஜய் அங்கு பேசிக் கொண்டிருந்தபோதே சிலர் மயக்கம் அடைந்தனர். எனவே அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்யப்பட்டது. அதன்பின் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மரணம் அடைந்து விட்டதாக தொடர் செய்திகள் வெளியானது. சம்பவ இடத்திலிருந்து 29 பேர் மரணமடைந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது வரை 40 பேர் வரை உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு விஜயே பொறுப்பேற்க வேண்டும் என விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினரும் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற போன்ற சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்களும், கரூர் மக்களும் விஜய்க்கு ஆதரவாக கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
விஜயின் அரசியல் வாழ்க்கைய முடக்க பார்க்கிறார்கள். அவர் எப்போது இந்த சுற்றுப்பணத்தை தொடங்கினாரோ அப்போதிலிருந்தே பல முட்டுக்கட்டைகளை போட்டார்கள். எந்த ஊரிலும் தவெக கேட்கும் இடத்தில் போலீஸ் அனுமதி கொடுப்பதில்லை. ஒருபக்கம் போலீஸ் கடைபிடிக்க சொன்ன எந்த விதிமுறையையும் தவெகவினர் பின்பற்றவில்லை. விஜய் நல்லது செய்ய வேண்டும் என முடிவெடுத்து அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள். விஜய்க்கு பேசி அனுமதி கொடுக்கப்பட்டிருந்த இடம் குறுகலான பகுதி. எந்த பக்கமும் செல்ல முடியாது. கடைகளை அடைத்து விட்டார்கள்.

தண்ணீர் கூட கிடைக்கவில்லை. திடீரென மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். எனவே, அந்த பகுதியே இருளாக மாறியது. ஆம்புலன்ஸ் ஒன்று உள்ளே வந்தது. அதற்கு வழிவிட பலரும் நகர்ந்தபோது கூட்ட நெரிசலில் பலரும் சிக்கினார்கள். போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஒருவரின் மீது ஒருவர் விழுந்தார்கள். விஜயை பார்க்க பல மணி நேரம் வெயிலில் நின்றதால் நீர்ச்சத்து குறைந்து பலரும் மயக்கமடைந்தனர்.
இப்படி எல்லாமே காரணமாகிவிட்டது. பலரும் உயிரிழந்ததற்கு காரணம் இதுதான். விஜய் மீது எந்த தவறும் இல்லை. போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் நிறைய போலீஸ் இல்லை. வேண்டுமென்றே விஜய் மீது பழி போடுகிறார்கள்’ என பலரும் பொங்கி இருக்கிறார்கள்.