Categories: Cinema News latest news throwback stories

அந்த நடிகர் ஓகே சொல்லிருந்தா தனுஷ் சினிமாவுக்கு வந்திருக்கவே மாட்டார்.! வெளியான பகீர் ரகசியம்.!

தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பாற்றல் மூலம் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்து நிற்கிறார் தனுஷ். இன்னும் சொல்ல போனால், இரண்டு முறை தமிழ் சினிமாவிவுக்கு சிறந்து நடிகருக்கான தேசிய விருது வாங்கி கொடுத்துள்ளார். தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என வளர்ந்து நிற்கிறார் தனுஷ்.

இப்படி பல்வறு புகழ்களை பெற்றுள்ள தனுஷ் , ஆரம்பத்தில் அதாவது, நடிக்க வரும் போது இவரை இவர் முன்னிலையிலேயே கலாய்த்துள்ளனர். பள்ளி படிப்பை முடிக்கும் முன்னரே, திரைத்துறைக்கு வந்துவிட்டார் தனுஷ். அப்போது மிகவும் ஒல்லியான தேகம், என பார்ப்பதற்கு ஹீரோ போல சுத்தமாக இருக்க மாட்டார் தனுஷ்.

ஆனால், அதுவே காலப்போக்கில் அவரது அடையாளமாக , நம்ம தெருவில் இருக்கும் ஒரு சுட்டி பையன் போல யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமாகிவிட்டார். இவர் சினிமாத்துறைக்கு வந்ததை குறித்து இவரது தந்தை ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது, இயக்குனர் கஸ்தூரி ராஜா ஒரு பள்ளிப்பருவ கதை ( துள்ளுவதோ இளமை ) எழுதி அதில் நடிக்க வைக்க அதற்காக 140க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஆடிசன் நடத்தியுள்ளாராம். அப்போது  தெலுங்கு நடிகர் உதய் கிரண் என்பவரிடம் கதை கூறி ஓகே சொல்லி படப்பிடிப்புக்கு  தயாரான நேரம் எதோ சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதாம் .

இதையும் படியுங்களேன் – அடிதூள்.! உருவாகிறது முதல்வர் ஸ்டாலின் பயோபிக்.! அனல் பறக்கும் அப்டேட் ஆன் தி வே..,

பின்னர் தான், கஸ்தூரி ராஜா யோசித்து இருக்கிறார் நம்ம வீட்டுலே ஒரு பையன் இருக்கிறார் அவரை நடிக்க வைத்து விடலாம் என முடிவு செய்து பின்னர் தான் தனுஷ் ஹீரோவாக அறிமுகமானாராம். ஒருவேளை உதய் கிரண் நடித்து இருந்தால் தனுஷ் சினிமா துறைக்கே வந்திருக்க மாட்டாராம். அவர் நடிக்காமல் போனது நல்லது தான் அதனால் தான் நமக்கு தனுஷ் எனும் நல்ல நடிகர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார்.

Manikandan
Published by
Manikandan