Categories: Cinema News latest news

இதை பத்தி என்கிட்ட கேட்காதீங்க-அத்துமீறிய பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய கஸ்தூரி ராஜா…

தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராவிதமாக சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்தனர். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தனுஷ் தற்போது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவும் தனுஷும் தனது மகன்களின் பள்ளி விழா ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

இந்த நிலையில் சமீபத்தில் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா “ராவலீ” என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது கஸ்தூரி ராஜா “இது எனக்கு சம்பந்தமில்லாத கேள்வி. இதை நீங்க என் கிட்ட கேட்கக்கூடாது” என கொந்தளித்தார். மேலும் பேசிய அவர் “இதனால் தான் நான் மீடியாவிடம் தொடர்பு வைத்துக்கொள்வது கிடையாது. அத்துமீறிய கேள்வி இது” எனவும் கூறினார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் பிரிந்ததில் இருந்து மீடியாவில் இது பெரிதும் பேச்சுப்பொருளானது. மீடியா மட்டுமல்லாது இணையத்தில் இப்போது வரை தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் தான் பத்திரிக்கையாளர் தனுஷ்-ஐஸ்வர்யா குறித்து கஸ்தூரி ராஜாவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கஸ்தூரி ராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனாரக திகழ்ந்தவர். “என் ராசாவின் மனசிலே”, “நாட்டுப்புறப் பாட்டு”, “வீர தாலாட்டு”, “கரிசக்காட்டுப் பூவே” என பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் தனுஷை வைத்து “துள்ளுவதோ இளமை”, “ட்ரீம்ஸ்” போன்ற திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Arun Prasad
Published by
Arun Prasad