Categories: Cinema News latest news throwback stories

நீங்க மக்களை ஏமாத்துறீங்க- சிவாஜியை நேருக்கு நேராகவே வம்பிழுத்த இயக்குனர்… என்னவா இருக்கும்!

சிவாஜி கணேசனுக்கு நிகரான ஒரு நடிகரை நாம் பார்க்கவே முடியாது. பல வெளிநாட்டு நடிகர்களும் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து பிரமித்துப்போயிருக்கிறார்கள். சிவாஜி கணேசனுக்கு 1995 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசின் செவாலியே விருது வழங்கப்பட்டது என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.

Sivaji Ganesan

அந்த விருது சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டது குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் உண்டு. அதாவது பிரான்ஸின் செவாலியே விருது குழு, தமிழ்நாட்டிற்கு வந்தபோது அவர்களுக்கு சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்த “நவராத்திரி” திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்களாம். அதனை பார்த்த படக்குழுவினர், “இந்த படத்தில் 9 பேர் நடித்திருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது” என கேட்க, அந்த படத்தை திரையிட்டுக்காட்டியவர்கள், “அந்த 9 பேரும் ஒரே ஆள்தான்” என கூறியிருக்கிறார்கள். இதனை கேட்டதும் விருது குழுவினர் அதிர்ந்து போனார்களாம்.

Navarathiri

“நவராத்திரி” திரைப்படத்தை மீண்டும் திரையிடுமாறு கூறியிருக்கிறார்கள். அதன் பின் 9 வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்ததை உணர்ந்து பிரம்மித்துப்போயினர். அதன் பிறகுதான் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டது. இவ்வாறு மிகப்புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்த சிவாஜி கணேசனை இயக்குனர் கஸ்தூரி ராஜா வம்பிழுத்திருக்கிறார். அதுவும் எப்படி தெரியுமா?

Kasthuri Raja

ஒரு முறை சிவாஜி கணேசனை பார்த்து, “சார் நீங்க நடிகர் திலகம்ன்னு சொல்லி மக்களை ஏமாத்துறீங்க” என கூறியிருக்கிறார். அதற்கு சிவாஜி கணேசன், “ஏன் அப்படி சொல்ற?” என கேட்க, அதற்கு அவர், “உங்களுக்கு கடவுள் அப்படிப்பட்ட முகத்தை கொடுத்திருக்கிறார். கட்டபொம்மன் என்றால் உங்கள் முகம் கட்டபொம்மனாக மாறிவிடும். வ.உ.சி என்றால் உங்கள் முகம் வ.உ.சி ஆக மாறிவிடும். இதெல்லாம் நீங்களா நடிச்சீங்க? கடவுள் உங்களுக்கு அப்படி ஒரு முகத்தை கொடுத்திருக்கிறான். நீங்க அந்த முகத்தை காண்பிச்சிகிட்டு நடிச்சேன் நடிச்சேன்னு சொன்னா எப்படி?” என சிரித்துக்கொண்டே கூறினாராம்.

இதையும் படிங்க: எம்ஜிஆரை பற்றி இதுவரை தெரியாத ஒரு ரகசியத்தை பகிர்ந்த பயில்வான் ரங்கநாதன்!.. அச்சச்சோ இப்படி சொல்லிட்டீங்களே…

Arun Prasad
Published by
Arun Prasad