அவதார் 2 ஷூட்ல செத்துப்போயிட்டேன்னே நினைச்சேன்... டைட்டானிக் நாயகியின் திகில் அனுபவம்

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் ஆஸ்கர் விருது உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக அவதார் படத்தின் இரண்டாவது பாகத்தை ஜேம்ஸ் கேமரூன் எடுத்து வருகிறார்.
இந்தப் படத்தில் கடலுக்கு அடியில் 7 நிமிடங்கள் படமாக்கப்பட்ட காட்சி ஒன்று குறித்து சிலாகித்துப் பேசியிருக்கிறார் நாயகி கேத் வின்ஸ்லெட். அவர் கூறுகையில், ``அந்த அனுபவம் மிகவும் அலாதியானது. மூளை எதைப் பற்றியுமே யோசிக்கவில்லை. உங்கள் தலைக்குள் எந்த சிந்தனையுமே இருக்காது. தலைக்கு மேலே எழுந்துபோகும் நீர்க்குமிழிகள் மட்டுமே முழுமையாக உங்களை ஆக்கிரமித்திருக்கும். நீரின் மேற்பரப்புக்கு வந்தவுடன் நான் முதலில் உச்சரித்த வார்த்தைகள், `நான் இறந்துவிட்டேனா?’ என்பதுதான். நான் இறந்துவிட்டதாக நினைத்தேன்’’ என்று அந்த ஷூட்டிங் அனுபவம் பற்றி பேசியிருக்கிறார் கேத் வின்ஸ்லெட்.