Categories: Cinema News latest news throwback stories

கிளைமாக்ஸ் சீன்ல உண்மையிலேயே எங்களை அடிச்சாங்க….காதல் பட அனுபவங்களை பகிர்கிறார் சந்தியா

காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட நடிகை கேரளாவைச் சேர்ந்த சந்தியா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

காதல் படத்தைத் தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன், கூடல்நகர், கண்ணாமூச்சி ஏனடா, ஓடிப்போலாமா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தன் பட அனுபவங்களைப் பற்றி சுவாரசியமாக நம்மோடு பகிர்கிறார்.

kathal

சின்னத்திரையில் சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். சீரியல்களில் அதிக தடவை நடிக்க வைப்பார்கள். சினிமாவில் அப்படி இல்லை. காதல் படத்தில் என்ட்ரி எப்படி உள்ளது?

ரொம்ப பெருமைக்குரிய விஷயம். பைக் ரைடு நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். எங்க குடும்பத்தினரே படத்தைப் பார்த்து ரொம்ப எமோஷனல் ஆனாங்க.

மனோஜ் கிருஷ்ணா எங்க மேனேஜர். அம்மாவுக்கு ப்ரண்ட். சின்ன சின்ன கேரக்டர் பண்ணலாமே என ஐடியா கொடுத்தார். அம்மாவுக்கும் ரொம்ப இன்ட்ரஸ்ட். 9ம் வகுப்புல போட்டோ ஷ_ட். ரொம்ப நல்லா வந்தது.

ஷங்கர் சார் நிறுவனத்தில இருந்து ஹீரோயின்ஸ் கேட்டுட்டு இருந்தாங்க. மனோஜ் இந்த விஷயத்தை சொன்னாங்க. அப்போ தான் 10ம் வகுப்பு முதல் வாரம் போனேன். இந்த மாதிரி ஆபர் வந்துருக்கு. டெஸ்ட் ஷ_ட் போலாமான்னு அம்மா கேட்டாங்க.

அப்புறம் ஷங்கர் சார் ஆபீஸ்க்கு போனோம். ரெண்டு மூணு சீன்ஸ் சொன்னாங்க. நடிச்சேன். ஒரு சாங் ஆக்ட் பண்ணுவேன். திருடா திருடில வரும் பஸ் சாங். அந்த சாங் மூலமா தான் எனக்கு நடிக்க சான்ஸ் கிடைச்சது.

kathal santhiya and bharath

கிளைமாக்ஸ் சீன்ல உண்மையிலேயே எங்களை அடிச்சாங்க. எல்லாருமே வில்லேஜ் சைடுல இருந்து வந்தாங்க. அதனால டைரக்டர் ரியலா இருக்கணும்னு உண்மையிலேயே நடிக்க வைச்சாங்க.

தலைமுடியலாம் பிடிச்சி இழுத்தாங்க. அப்போ எனக்கு ஜிவ்வுன்னு இருந்தது. ஆனால் படம் பார்க்கும் போது சூப்பரா இருந்தது.

பாலசந்தர் சார், மணிரத்னம் சார், கமல் சார், ரஜினி சார் என எல்லாருமே என்னைக் கூப்பிட்டு பாராட்டுனாங்க. தனுஷ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

வல்லவன் படத்தில சுச்சிங்கற கேரக்டரில் நடிச்சிருக்கேன். எங்க பேமிலிய பத்தி சொல்லணும்னா வெங்கட் மை ஹஸ்பண்ட். லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ். நாலு வயசுல ஒரு பொண்ணு ஷீமா.

santhiya and venkat

2015ல நடந்த திருமணத்திற்கு அப்புறமா சினிமாவிற்கு முழுக்கு போட்ட சந்தியா குடும்பத்தை செவ்வனே கவனித்து வருகிறார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v