×

38 வயதாகும் காதலிக்க நேரமில்லை நடிகைக்கு திருமணம்..

‘ஸ்வந்தம் சுஜாதா’ சீரியலில் நடித்து வரும் டோஷ் கிறிஸ்டியை திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
 
chandana+lakshman+tosh

காதலிக்க நேரமில்லை’ சீரியல் புகழ் சந்திரா லட்சுமணன் தனது திருமண செய்தியை அறிவித்துள்ளார். விஜய் டிவி-யில் கடந்த 2007 - 2008-ம் ஆண்டு ஒளிபரப்பான சீரியல் ‘காதலிக்க நேரமில்லை’. பிரஜின், சந்திரா இணைந்து நடித்த இந்த சீரியலின் பாடலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரின் காலர் ட்யூனாகவும் மாறியது.

முதன் முதலில் 2002-ம் ஆண்டு மனசெல்லாம் படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கிய சந்திரா, தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களிலும், ஏராளமான சீரியல்களிலும் நடித்தார். 2014 - 2015-ம் ஆண்டு சன் டிவி-யில் ஒளிபரப்பான, ’பாசமலர்’ சீரியலில் நடித்த சந்திரா, பின்னர் மலையாள சீரியலில் கரை ஒதுங்கினார்.

prajan

தற்போது மலையாளத்தில் சூர்யா டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். 38 வயதாகும் சந்திரா திருமணமாகாதவர். இதனால் எப்போது அவருக்கு திருமணம்? என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் இந்த கேள்விக்கு தற்போது பதிலளித்திருக்கிறார் சந்திரா. தன்னுடன் ‘ஸ்வந்தம் சுஜாதா’ சீரியலில் நடித்து வரும் டோஷ் கிறிஸ்டியை திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இதையடுத்து சந்திரா லட்சுமணனுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

78978

From around the web

Trending Videos

Tamilnadu News