பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர் கேத்ரீனா கைப். பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் இவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் நேற்று மாலை 3.30 மணியிலிருந்து 3.45 மணிக்குள் ராஜஸ்தானின் உள்ள சவாய் மாதோபூரில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் நடைபெற்றது. அவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு செல்போன், கேமரா ஆகியவை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, அவரின் திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
திருமணத்திற்கு முன்பு நடக்கும் சம்பிராதயங்களான மெஹந்தி, ஹல்தி போன்ற சடங்குகள் தொடர்பான புகைப்படங்கள் கூட எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நேற்று திருமணம் முடிந்த நிலையில் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கேத்ரீனா கைஃப் ‘இந்த தருணத்திற்கு எங்களை கொண்டு வந்த அனைத்திற்கும் எங்கள் இதயங்களில் அன்பும் நன்றியும் மட்டுமே. இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்கும்போது உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் எதிர்பார்க்கிறோம்’ என உருகியுள்ளார்.
அவருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…