ரெக்கார்ட் பிரேக் செய்த ‘கட்டாளன்’.. மல்லுவுட்டை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படம்
தமிழை விட சமீபகாலமாக மற்ற மொழிகளில் சிறந்த படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் தமிழ் ரசிகர்கள் அப்படி பிற மொழிகளில் வெளியாகும் படங்களை எதிர்பார்த்தும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழை பொறுத்தவரைக்கும் ஹீரோயிசத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுத்து வருகிறார்கள். உதாரணமாக ரஜினியின் படங்களை எடுத்துக் கொண்டால் அவர் திரும்புவது, ஸ்டைலாக பார்ப்பது, கையை தூக்குவது , காலை தூக்குவது இதுதான் அவருடைய வேலையாக இருக்கும். அதை பிஜிஎம் மூலமாக மாஸாக்கி காட்டி விடுவார்கள்.
கதைனு ஒன்று இருக்கவே இருக்காது. இப்படித்தான் சமீபகாலமாக ரஜினியின் படங்கள் வெளியாகி வருகின்றன. சமூக கருத்தை பேசியிருக்கிறதா? அல்லது சோசியல் மெசேஜ் எதுவும் இருந்திருக்கிறதா? ஆனால் பிற மொழிகளில் குறிப்பாக மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஆக்ஷனும் இருக்கிறது. கருத்துள்ள படங்களும் வெளியாகி வருகின்றன.
ஆக்ஷன் படங்களோடு அதன் திரைக்கதை வடிவமைப்பு காண்போரை சிலிர்க்க வைக்கிறது . அதுதான் மேட்டர். அதை நம்மூர் ஆள்கள் மிஸ் செய்து விடுகின்றனர். அந்த வகையில் பாதாளத்தில் கிடந்த கன்னட சினிமாவை தூக்கி உச்சத்திற்கு கொண்டு சென்ற படங்கள் கேஜிஎஃப் மற்றும் காந்தாரா. அடுத்ததாக கரிகாடன் என்ற மற்றுமொரு படமும் வெளியாக இருக்கின்றது.
அதே போல் மலையாளத்திலும் லோகா மாதிரியான படங்கள் வெளியாகி மலையாள சினிமாவிற்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா படமும் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் கட்டாளன் திரைப்படமும் தயாராகி வருகின்றது. ஆண்டனி வர்கீஸ் ஹீரோவாக நடிக்கும் கட்டாளன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என ஒரு பேன் இந்தியா படமாக உருவாகி வருகின்றது.
இந்தப் படத்தை கியூப்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாகி வருகிறது. குறிப்பாக தந்தங்களை கடத்துவது பின்னணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தை பால் ஜார்ஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் கட்டாளன் படத்தின் ஓவர் சீஸ் உரிமையை பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இது துபாயை மையமாக கொண்டு இயங்கி வரும் ஒரு பெரிய நிறுவனம். பொதுவாக பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் ஓவர் சீஸ் உரிமையை இந்த நிறுவனம் தான் கைப்பற்றும். அதன் பிறகு பிற நாடுகளுக்கு அது குறிப்பிட்ட தொகையில் விற்கும். இதுவரை மலையாள சினிமாவில் எந்தப் படமும் ஒரு பெரிய தொகைக்கு இந்த உரிமையை பெறவில்லையாம். கட்டாளன் படம்தான் அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எல்லையை தாண்டி சாதனை படைத்த கட்டாளன் என்றும் மலையாள ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
