×

காட்டுப் பயலே பாடல் வீடியோ  - சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சூர்யா நடிப்பில் உருவாகி ரிலிஸுக்கு தயாராக இருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் வீடியோ பாடல் ஜூலை 23 ஆம் தேதி வெளியாக உள்ளது

 

சூர்யா நடிப்பில் உருவாகி ரிலிஸுக்கு தயாராக இருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் வீடியோ பாடல் ஜூலை 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சூர்யா தனது நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை மிகவும் எதிர்பார்ப்போடு ரிலிஸுக்கு தயாராக்கி வந்தார். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக இப்போது அந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனால் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யக் கூட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை.

இந்நிலையில் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப் போற்று திரைப்பட்டத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாக இருக்கிறது. இதை அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் அறிவித்துள்ளார். இந்த பாடலை சண்டக்கார மற்றும் ரௌடி பேபி ஆகிய பாடல்களை பாடிய தீ பாடியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News