Vijay: விஜயை மறைமுகமாக கிண்டல் செய்தாரா கவின்? என்ன நக்கல்யா உங்களுக்கு?
இன்று பல படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. அதில் அனைவரும் எதிர்பார்க்கிற திரைப்படமாக இருப்பது கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படம் தான். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். கவினுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் படத்தில் சரியான போட்டி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கவின் பேசிய பேச்சு மறைமுகமாக விஜயை தாக்குவதாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதாவது கவின் மாஸ்க் திரைப்படத்தின் புரோமோஷனுக்காக மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு கல்லூரியில் புரோமோஷன் விழா நடந்தது. அப்போது கவின் படத்தை பற்றி பேசினார். பேசும் போது மாணவர்களிடம் படம் வெள்ளிக் கிழமை ரிலீஸாகிறது. அந்த நேரம் உங்களுக்கு கல்லூரி இருக்கும். அதனால் முதலில் படிப்புதான் முக்கியம். வெள்ளிகிழமை யாரும் வரவேண்டாம்.
சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் இருக்கிறது. அப்போது வந்து பார்த்துக் கொள்ளுங்கள். சினிமா ஒரு பொழுது போக்குத்தான். உங்களுக்கு படிப்புதான் முக்கியம் என்று கவின் சொன்னார். இதுவரை யாரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டாம் என எந்த நடிகரும் சொன்னதில்லை. இது பல பேருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் விஜயை அல்லது அவரது கட்சியை அல்லது மாநாட்டை தாக்கித்தான் கவின் பேசியிருக்கிறார் என்று பலரும் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஏனெனில் விஜய் அவருடைய முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தும் போது இளைஞர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப புஸ்ஸி ஆனந்தும் ஆஃபிஸில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரிக்கு போகிறவர்கள் அன்று ஒரு நாள் எங்களால் வர முடியாது என்று உங்களுடைய அலுவலகத்தில் கல்லூரியில் தெரிவித்து விடுங்கள். நமக்கு மாநாடுதான் முக்கியம் என்றவாறு பேசினார்.
புஸ்ஸி ஆனந்தின் இந்த பேச்சு அப்போது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் கவின் இப்படி பேசியிருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். கவினுக்கு எத்தனை படம் ஹிட்டானது என தெரியவில்லை. ஒரு படம் ஓடினால் தன்னை ஒரு பெரிய நடிகர் என்று பல பேர் நினைத்துவிடுகிறார்கள். கல்லூரி மாணவர்கள் மீது அக்கறை இருக்கிறது என்றால் ஏன் புரோமோஷனை கல்லூரியில் நடத்துகிறீர்கள்?

இதை சொல்வதற்கு முன்னாடி அந்த தயாரிப்பாளரின் நிலையை நினைத்துப் பார்த்தீர்களா? ஒரு படம் ரிலீஸாகிறது என்றால் முதல் நாள் முதல் காட்சிதான் முக்கியம். இரண்டாவது நாளே அந்தப் படம் தேறுமா தேறாதா என்று தெரிந்துவிடும். கலெக்ஷன் அளவில் பார்த்தாலும் வெள்ளி, சனி, ஞாயிறு இந்த மூன்று நாள்தான் முக்கியம். கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள் கவின் என இந்த தகவலை செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
