ஏ.ஆர்.ரகுமான் ஃபார்ம்ல இல்ல!.. அடங்காத கவின்!.. இப்படியே போனா மார்கெட் காலிதான்!..
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்து வந்தவர் கவின். சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தாலும் கதாநாயகன் நண்பர்களில் ஒருவராக நடிக்கும் வேடங்கள்தான் கிடைத்தது. ஒரு கட்டத்தில் ஹீரோ வாய்ப்புகள் வந்தாலும் அந்த படங்கள் ஓடவில்லை. ஆனாலும் லிப்ட், டாடா போன்ற படங்கள் அவருக்கு கை கொடுத்தது.
ஆனால், அதன்பின் வெளிவந்த ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் போன்ற படங்கள் ஓடவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை கவினும், ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்த மாஸ்க் படமும் வெளியானது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருகிறது. ஒருபக்கம், கவின் மிகவும் ஆட்டிடியூட் காட்டுகிறார். கதையில் தலையிட்டு நிறைய மாற்ற சொல்கிறார். இயக்குனருக்கு பதில் இவர் எடிட்டிங் செய்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வருகிறது. அதுதான் அவரின் தோல்விக்கு காரணம் எனவும் சினிமா உலகில் பேசினார்கள். ஆனால், கவின் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில்தான், கவினை வைத்து படமெடுக்க ஆசைப்பட்ட ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் அந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை இருந்தால் பெரிய அளவில் படம் பேசப்படும் என நினைத்திருக்கிறார்கள். இதை அவர்கள் கவினிடம் சொன்னபோது ‘ஏ.ஆர்.ரஹ்மானா?.. அவர் இப்ப ஃபீல்ட் அவுட்.. அவர் வேண்டாம்.. பிளடி பெக்கர் படத்திற்கு இசையமைத்த ஜென் மார்ட்டினை போடுங்கள்’ என கவின் சொல்ல இயக்குனரும், தயாரிப்பாளரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
தன்னுடைய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதை பெருமையாக கருதும் நடிகர்கள் இருக்கும் நிலையில் கவின் இப்படி சொல்லியிருப்பது திரையுலகில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. கவின் இப்படியே எல்லாவற்றிலும் தலையிட்டு கொண்டிருந்தால் அவரின் மார்கெட் காலி ஆகிவிடும் என பேச துவங்கிவிட்டனர்.
