Categories: Cinema News latest news

கோடி கேட்டா தரமாட்றாங்க! எனக்கும் வேற வழி தெரியல.. ஒரே ஒரு போட்டோவால் பீதியை கிளப்பிய கவின்

Actor Kavin: பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்தார். கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரின் மூலம் அறிமுகமான கவின் அதன் மூலம் மேலும் பல தொடர்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கவினுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

இருந்தாலும் அவரால் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. அதன் பிறகே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களை குதூகலப்படுத்த இறங்கினார். அதுவும் சாண்டியுடனான கவினின் காம்போ ரசிக்கும் படியாக அமைந்தது. இருவரும் சேர்ந்து செய்த அட்ராசிட்டிஸுக்கு அளவே இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் கமலே இவர்களை ரசிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: அப்படின்னா லிங்கா படம் தோல்வி இல்லையா!.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!..

இருவரும் சேர்ந்து சொந்தமாக பாடல் வரிகளை எழுதி பாடியும் ஆடவும் செய்து பிக்பாஸ் வீட்டை மிகவும் கூலாக மாற்றினார்கள். இதற்கு மத்தியில் லாஸ்லியாவுடனான காதலும் மேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வத்தை தூண்டியது. ஆனால் அந்த காதல் வெறும் வீட்டிற்குள்தான். வெளியில் இல்லை என இருவரும் நிருபித்தார்கள். கடந்த ஆண்டுதான் மோனிகா என்ற பெண்ணை கவின் திருமணம் செய்தார்.

kavin

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன. லிஃப்ட் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து டாடா என்ற மற்றுமொரு சிறப்பான படத்தில் நடித்தார். அந்த இரு படங்களின் வெற்றி கவினை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த இரு படங்களின் வெற்றியால் கவின் அடுத்தடுத்த படங்களில் கோடிகளில் சம்பளம் கேட்க தொடங்கினார்.

இதையும் படிங்க: அதெல்லாம் இல்லை… கில்லி படத்தின் வீடு இதுதான்… சீக்ரெட்ட லீக் பண்ணிட்டாங்களே!..

ஆனால் யாரும் அந்தளவுக்கு சம்பளம் கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் கவினின் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனது இன்ஸ்டா பக்கத்தில் லேடி கெட்டப்பில் இருக்கும் வகையில் கவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மீரா மிதுனையும் அழகாக தெரிகிறீர்கள் என கிண்டலடித்து வருகிறார்கள்.

kavin

Published by
Rohini