Mask: நாளை ‘மாஸ்க்’ ரிலீஸ்!.. ஃபர்ஸ்ட் டே போகாதீங்க!.. கவின் இப்படி சொல்லிட்டாரே!..
நாளை கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்க். இந்த படத்தில் கவினுடன் இணைந்து ஆண்ட்ரியா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விக்ரமன் அசோக் என்பவர் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே கவின் நடிப்பில் டாடா, லிப்ட் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் கடைசியாக வெளியான கிஸ் மற்றும் பிளடி பெக்கர் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை வரவில்லை. மிகவும் செலெக்ட்டிவ்வான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கவின். அந்த வகையில் மாஸ்க் திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைகளத்தில் அமைந்த திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. படத்தில் ஆண்ட்ரியா மெயின் வில்லியாக நடித்திருக்கிறார்.
கொள்ளை அடிக்கும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. ஒரு ஆக்சன் காமெடி திரைப்படமாகவே இந்த படம் தயாராகி இருக்கின்றது .படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று மதுரையில் இந்த படத்தை பற்றி பேசி இருந்தார் கவின். அப்போது மதுரை மண்ணை என்னால் மறக்க முடியாது. நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு மதுரை மக்கள் தான் காரணம்.
ஒரு சமயம் கார் விபத்தில் சிக்கி இருந்த என்னை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று என்னை காப்பாற்றியது மதுரை மக்கள். அதில் என் நண்பனை நான் இழந்தேன். அன்று ஒரு 10 அல்லது 15 பேர் இருப்பார்கள். அவர்கள் தான் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்கள். அவர்கள் இல்லை என்றால் இன்று நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என கவின் கூறினார்.

அது மட்டுமல்ல அங்குள்ள கல்லூரி மாணவ மாணவிகளிடம் உரையாடிய பொழுது நாளை உங்களுக்கு கல்லூரி இருக்கிறது அல்லவா? அதனால் நீங்கள் முதலில் படிப்பின் மீது கவனம் செலுத்துங்கள். சனி ஞாயிறு படத்தை பார்த்து கொள்ளலாம். இது ஒரு பொழுதுபோக்கு மட்டும்தான். படிப்புதான் முக்கியம். அதன் மீது முதலில் கவனம் செலுத்துங்கள் என்று மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை கூறினார்.
இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அஜித் அடிக்கடி சொல்வதும் இதைதான். சினிமாவை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என்று அஜித் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் கவின் நேற்று நடந்த ப்ரொமோஷன் விழாவில் மாணவர்களிடம் இவ்வாறு பேசியது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
