எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்த கவின், நயன்தாராவின் Hi ட்ரெய்லர்!

 
Hi

கவின் - 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் புதிய படம் தான் 'ஹாய்' (Hi). ஃபீல் குட் ரொமான்டிக் ஜானர் படமான இதை விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார்.

இதில் முக்கிய கேரக்டர்களில் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, அம்ருதா ஶ்ரீநிவாசன், ஆதித்யா கதிர், சத்யன், காவியா அறிவுமணி, VTV கணேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் நயன்தாரா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web