Categories: Cinema News latest news

அடுத்த தளபதி நீங்கதான்… ஆள விடுங்கடா சாமிகளா!!… கும்புடு போட்டு கிளம்பிய பிக் பாஸ் நடிகர்…

“கனா காணும் காலங்கள்”, “தாயுமானவன்”, “சரவணன் மீனாட்சி” போன்ற தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் கவின். மேலும் “பிக் பாஸ் சீசன் 3” நிகழ்ச்சியில் கன்டெஸ்ட்டன்ட் ஆக கலந்துகொண்டு இளம்பெண்களின் உள்ளங்களையும் கவர்ந்தார்.

Kavin

மேலும் வெள்ளித்திரையில் “பீட்சா”, “இன்று நேற்று நாளை”, “சத்ரியன்” போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து “நட்புன்னா என்னன்னு தெரியுமா?” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன் பின் கவின் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில் கவின் ஹீரோவாக நடித்த “டாடா” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

DaDa

இந்த நிலையில் நேற்று சென்னை கமலா திரையரங்கத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த கவின் “எனது கேரியரின் தொடக்கத்தில் இருந்தே எனக்கு ஆதரவாக நிற்கின்றீர்கள், மிக்க மிக்க நன்றி. நல்ல திரைப்படங்கள் பலவற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பீர்கள். அதே போல் டாடா திரைப்படத்தையும் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என கூறினார்.

அப்போது பத்திரிக்கையாளர்களில் ஒருவர், “உங்களை அடுத்த தளபதி என்று கூறுகிறார்களே, அது பற்றி கொஞ்சம் கூறுங்கள்?” என கேட்டபோது, கவின் அதிர்ச்சிக்குள்ளானார்.

Kavin

“ஐயா,, 12 வருட போராட்டம் ஐயா. இது மாதிரி எதையாவது கேட்டு கேரியரை முடிச்சிவிட்டுடாதீங்க” என்று கூறி அந்த பத்திரிக்கையாளருக்கு கும்புடு போட்டார் கவின். ஏற்கனவே யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்க, கவினிடம் இவ்வாறு ஒரு பத்திரிக்கையாளர் கேள்விக்கேட்டது விஜய் ரசிகர்களை கொந்தளிக்கவைத்துள்ளது.

இதையும் படிங்க: ஏவிஎம் படத்தில் நடிக்க விநோதமான கன்டிஷனை போட்ட சிவாஜியின் தம்பி.. ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை…

Published by
Arun Prasad