×

இந்திய ட்ரெண்டிங்கில் கவின்... எதுக்கு இந்த ட்ரெண்டு சொல்லிட்டு பண்ணுங்க மக்கா...

கவின் திடீரென ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
 
இந்திய ட்ரெண்டிங்கில் கவின்... எதுக்கு இந்த ட்ரெண்டு சொல்லிட்டு பண்ணுங்க மக்கா...

பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் கவின். மூன்றாவது சீசனில் வீட்டுக்குள் சென்றவர் தனக்கென ஒரு நட்பு வட்டத்தையும், லாஸ்லியாவுடன் காதலையும் உருவாக்கி கொண்டார். நிகழ்ச்சியில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு வாரமும் இவருக்கு அதிக அளவிலான ஓட்டுகள் கிடைத்தது. ஒரு கட்டத்தில் இவருக்கு தான் டைட்டில் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார். 

ரசிகர்கள் பலரும் செம ஷாக்கை கொடுத்த கவின், தொடர்ந்து ரசிகர்களிடம் மேலும் லைக்கை குவித்தார். தொடர்ந்து, கவின் ரசிகர்கள் வித்தியாசமான ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட்டிங்கில் வைத்து இருப்பர். இந்நிலையில், திடீரென இன்று கவின் பெயர் ட்ரெண்டிங்கில் வந்தது. அதிலும், இந்திய அளவில் ட்ரெண்ட் என்பதால் பலருக்கும் என்ன என தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது. அதுகுறித்து கவினே தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.


அப்பதிவில், ஆஸ்கு மாறோ எனத் தொடங்கும் ஆல்பம் பாடல் வெளியாக இருக்கிறது. ஸோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் தேஜு அஷ்வினியுடன் இணைந்து கவின் நடனம் ஆடி இருக்கிறார். தரண்குமார் இசையமைத்து இருக்கும் இந்த பாடல் விரைவில் சோனி மியூசிக் யூ ட்யூப் சேனலில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற அஷ்வின் நடிப்பில் குட்டி பட்டாஸ் என்ற சிங்கிள் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News