×

ஸ்லீவ்லெஸ் உடையில் புது முல்லை... இது என்ன நல்லாவா இருக்கு.. கடுப்பில் சித்து ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புது முல்லையாக எண்ட்ரி கொடுத்திருக்கும் காவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 

ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரின் பாஸிடிவிட்டி கதைக்காவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். மூன்று ஜோடிகளை முக்கியமாக வைத்து நகரும் கதைக்கு பலரும் லைக்ஸ் தட்ட லாக் டவுனுக்கு பிறகு சீரியலின் டிஆர்பி ரேட் எகிறியது. ஆனால், முல்லை கதாபாத்திரத்தில் ஹிட் அடித்த சித்து. திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதனால், சித்துவின் கேரக்டர் முடிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தயாரிப்பு நிறுவனம் சித்துவிற்கு மாற்று நடிகையை தேடி வந்தனர். அதில் பல பெயர்கள் அடிப்பட்டது. கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் அறிவு கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் தொடரிலேயே சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட பேன்பேஜிகளை கொண்டு இருக்கிறார் காவ்யா. தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாகவும் இருக்கிறார்.

தொடர்ந்து, தனது போட்டோஷூட்களை பகிர்ந்து வரும் காவ்யாவின் சமீபத்திய ஒரு புகைப்படம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அப்படத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் அமர்ந்து இருக்கும் காவ்யா, தற்போது முல்லை கதாபாத்திரத்தை ஏற்று இருப்பதால் சில காலம் கவர்ச்சியை கைவிடலாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News