1. Home
  2. Latest News

என்னை ஏன் டார்கெட் பண்றீங்க?. என் பேக்ரவுண்டு தெரியுமா?.. செல்லத்த புலம்பவிட்டாங்களே!..

kayadu

கயாடு லோகர்

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயாடு லோஹர். நடிகை, மாடல் என தனது கெரியரை துவங்கினார். இவர் முதலில் நடித்தது ஒரு கன்னட திரைப்படத்தில்தான். 2021ம் வருடம் இவர் திரையுலகில் நடிக்க துவங்கினார். ஆனால் தமிழில் டிராகன் என்கிற ஒரு படத்தில் இவர் நடிக்க துவங்கிய போதே ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார்.

ஓவர் நைட்டில் இளசுகளின் கனவு கன்னியாக மாறினார் கயாடு லோகர். அவரின் புகைப்படங்கள் twitter, facebook போன்ற சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்து நெகிழ்ந்து போன கயாடு லோகர் ரசிகர்களுக்கு நன்றியும் கூறினார். கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதர்வாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள இதய முரளி படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இவரின் டிராகன் படம் வெளிவந்த பின்னர் ஒரு அரசியல் பிரபலம் நடத்திய பார்ட்டியில் கலந்து கொள்ள இவருக்கு 35 லட்சம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கயாடு லோகர் ‘சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி பரவும் அவதூறு செய்திகள் எனக்கு வேதனை தருகிறது. ஒரு கண்ணியமான குடும்ப பின்னணியிலிருந்து வந்தவன் நான். என் பின்னால் பேசுபவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், ஆழ் மனதில் அது உறுதி கொண்டே இருக்கும். எந்த தவறும் செய்யாமல் கனவுகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்? என புலம்பியிருக்கிறார்.

 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.