கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்... அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீஸ்!
Aug 8, 2026, 14:01 IST
'டிராகன்'-ல் அறிமுகமான நடிகை கயாடு லோஹர் கடைசியாக நடித்த 'இதயம் முரளி' கடந்த ஜூலை 10-ஆம் தேதி தான் வெளியானது.
இதையடுத்து இவர் நடித்துள்ள மூன்று புதிய படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. முதலில் துல்கர் சல்மானின் 'அயம் கேம்' படம் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.

அடுத்து ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ள 'Immortal' படம். இது வருகிற செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி வெளியாகப் போகிறது.
இதன் பிறகு 'தி பாரடைஸ்' திரைப்படம். நானி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.