KBalachander: விஜய் நடிப்பில் வெளியான ஒரு படத்தினை தயாரிப்பாளர் பாலசந்தர் தயாரித்து வந்த நிலையில் அதற்காக போடப்பட்டு இருந்த செட்டை பார்த்து குழம்பிய விஷயமும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர் கே.பாலசந்தர். இயக்குவதை விட பல படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்து இருக்கிறார். தமிழில் கமல், ரஜினிகாந்த் படங்களை மட்டுமல்லாமல் விஜய் நடிப்பில் உருவான திருமலை படத்தினையும் தயாரித்து இருக்கிறார். ஆனால் அப்போது கவிதாலயா புரோடக்ஷன் பொறுப்பில் இருந்தது பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி.
இதையும் படிங்க: வழக்கம் போல பெரியவரு உலறிட்டாரு! ‘கோட்’ படத்தின் முக்கியமான சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட கங்கை அமரன்
கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார் கே.பாலசந்தர். விஜயை வைத்து திருமலை ஷூட்டிங் தொடங்கப்பட்டு விட்டது. மெக்கானிக் கதையை வைத்து மையமாக உருவாக்கப்பட இருந்த கதை என்பதால் ரியலாக ஒரு மெக்கானிக் செட்டை போட்டு இருந்தார் இயக்குனர் ரமணா.
ஆனால் அந்த தத்ரூபமாக இருந்த செட்டை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு விட்டனராம். மெயின் ரோட்டில் போட்டு இருந்த செட் என்பதால் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அந்த இடத்தினை மறைத்து வைத்து விடுவார்களாம். ஷூட்டிங்கின் போது மறைக்கப்பட்ட பலகைகளை எடுத்து ரியல் போல் வைத்துவிடுவது வழக்கமாம்.
இப்படி இருக்க ஒருநாள் ஷூட்டிங் நடந்துக்கொண்டு இருந்தது. விஜய் மற்றும் ரகுவரன் சாப்பிடும் காட்சியை ரமணா இயக்கி கொண்டு இருக்கிறார். ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என விரும்பி கே.பாலசந்தர் உடனே கிளம்பிவிட்டாராம். பிரசாத் ஸ்டுடியோவை தாண்டி அந்த செட்டை கண்டுப்பிடிக்க முடியாமல் சுற்றி கொண்டே இருந்தாராம்.
இதையும் படிங்க: ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகர்! உள்ளே எண்ட்ரி ஆகும் ரஜினி வெறியன்.. யார் தெரியுமா?
இதை தொடர்ந்து படப்பிடிப்பில் ரமணா உதவியாளருக்கு அழைத்து முகவரியை கேட்க அவர் சொல்வதும் சரியாக புரியவில்லையாம். உடனே ரமணாவிடம் போனை கொடுக்கிறார். அவரிடம் கே.பாலசந்தர், நான் பிரசாத் ஸ்டுடியோஸ் தாண்டி ஒரு சேரி போல் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் இருக்கேன் என்றாராம்.
அதை கேட்ட ரமணா, காரை விட்டு வெளியில் வாங்க சார். நீங்க நிற்பதே நம்ம செட்டுக்கு முன்னால் தான் எனக் கூறினாராம். இதை கேட்டு ஆச்சரியப்பட்ட கே.பாலசந்தர். எத்தனையோ படத்தின் செட்டை பார்த்து இருக்கேன். இத்தனை தத்ரூபமாக உருவாக்கியது நீ தான் என இயக்குனர் ரமணாவை பாராட்டி இருந்தாராம்.
இதையும் படிங்க: கேப்டனை பேசி நாசமா போச்சு! அடுத்து விஜயா? சொம்பு தூக்கியா மாறிய வடிவேலு.. என்னாக போதோ
Kantara Chapter…
Pradeep Ranganathan:…
Hariskalyan: இந்த…
STR49: முன்னணி…
Biggboss: விஜய்…