துருவா சர்ஜாவின் கேடி தி டெவில் படத்தின் ட்ரெய்லர் திடீர் நீக்கம்
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேடி தி டெவில் (KD The Devil) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் யூடியூப் தளத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரேம் இயக்கத்தில், துருவா சர்ஜாநடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கேடி தி டெவில். 1970-களில் பெங்களூருவில் நடந்த சில உண்மை சம்பவங்களை தழுவியும், அப்போதைய அண்டர்கிரவுண்ட் நிகழ்வுகளை மையமாக வைத்தும் இப்படம் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள இப்படத்தில், துருவா சர்ஜாவுடன் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் அப்டேடுகள் வெளியாகி வ்ரும்போதெல்லாம் ஏதவது ஒரு சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. சமீபத்தில், இப்படத்தில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி நடனமாடிய சர்சே நின்னா செரகா என்ற பாடல் வெளியாகியது. ஆனால் அந்தப் பாடலின் வரிகள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் தயாரிப்பு நிறுவனம் அந்தப் பாடலை யூடியூபிலிருந்து நீக்கியது.
இந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ட்ரெய்லரும் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் ஒரு விளக்கத்தை கொடுத்தது.
அதில் சமீபத்தில் யூட்யூபில் வெளியிடப்பட்ட KD The Devil திரைப்படத்தின் டிரைலரில், சென்சார் சான்றிதழ் வழங்கும் பணியின் போது சான்றளிக்கப்படாத சில உள்ளடக்கங்கள் கவனக்குறைவாகச் சேர்க்கப்பட்டிருந்தன. எனவே, நாங்கள் அந்த ட்ரெய்லரை உடனடியாக நீக்கிவிட்டோம். சென்சார் போர்டு வழிகாட்டுதலுக்கு இணங்க, முறையாக சான்றிதழ் பெறப்பட்ட திருத்தப்பட்ட புதிய ட்ரெய்லர் பதிப்பை விரைவில் பதிவேற்றுவோம். நடந்த இந்த தற்செயலான கவனக்குறைவுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம். மேலும், திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் அனைத்து விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் முழுமையாகக் கடைப்பிடிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
