பார்க்குறதுக்கு தான் ஒல்லி உடம்பு.... ஆனால் அதுல கில்லி - கீர்த்தி பாண்டியன் பளீச்!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் நடிகர் அருண் பாண்டியன். இவரது மகள் தான் கீர்த்தி பாண்டியன். தமிழ் சினிமாவில் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் .
தொடர்ந்து அன்பிற்கினியால், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன் நான் கார் மட்டும் இல்ல டிராக்டர், ஏன் JCP கூட நல்லாவே ஓட்டுவேன்.

லாக்டவுன் சமயத்தில் எங்களுடைய சொந்த ஊரில் உள்ள தோட்டத்திற்கு வேலையாட்கள் யாரும் வராததால் எங்களுடைய தோட்டப்பணிகளை கவனிப்பதற்காக நானே JCP மற்றும் டிராக்டர் உள்ளிட்டவற்றை ஓட்டினேன் எனக்கு கூறி இருக்கிறார்.
இதை அறிந்த ரசிகர்கள் பாக்குறதுக்கு தான் நீங்க ஒல்லி உடம்பு ஆனால் இப்படி கில்லி மாதிரி எல்லா வேலையும் பண்றீங்களே என அவரைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். முன்னதாக லாக்டவுன் சமயத்தில் பாம்பு ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்த போது அதை தைரியமாக பிடித்து அப்புறப்படுத்தினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களை வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
