4 கோடியில் வாங்கி 8.9 கோடிக்கு விற்பனை! மெகா லாபம் பார்த்த தனுஷ் பட நடிகை

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோன் மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையில் வாங்கியிருந்த சொத்துக்களை
 
keerthi sanon

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோன் மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையில் வாங்கியிருந்த சொத்துக்களை தற்போது பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்துள்ளனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு  ஹெரோபந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கீர்த்தி சனோன். தொடர்ந்து  பரெலி கி பார்பி லுகா சுப்பி  உள்ளிட்ட  ஹிட் படங்களில் நடித்துள்ளார்.  சமீபத்தில் தேரே இஷ்க் மே படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். 

keerthi sanon

கீர்த்தி சனோனும் அவரது சகோதரி நுபுர் சனோன் மற்றும் தாயார் கீதா சனோன் ஆகியோர் இணைந்து மும்பையின் அந்தேரி வெஸ்ட் பகுதியில் உள்ள  ரஹேஜா கிளாசிக்  குடியிருப்பு வளாகத்தில் வைத்திருந்த 4 சொகுசு வீடுகளை தற்போது ரூ. 8.9 கோடிக்கு மொத்தமாக விற்பனை செய்துள்ளனர்.

கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய காலகட்டங்களில் இந்த 4 வீடுகளையும் சனோன் குடும்பத்தினர் மொத்தம்ரூ. 4.31 கோடிக்கு வாங்கியிருந்தனர். தற்போது விற்றதன்மூலம்  அவர்களுக்கு சுமார் 107% லாபம் கிடைத்துள்ளது. 

Tags

From Around the web