கீர்த்தி சுரேஷ் உடன் மோதும் கபாலி ஹீரோயின்!.. அக்கா டிரெய்லர் எப்படி இருக்கு?..
கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ள அக்கா வெப் சீரிஸின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள இத்தொடர் அக்டோபர் 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதில் பவானி என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ருத்ராவாக ராதிகா ஆப்தேவும் நடித்துள்ளனர். தங்களின லட்சியங்களுக்காகப் போராடும் இருவருக்கும் இடையில் நடக்கும் மோதல் என கதை உருவாகியுள்ளது. மேலும், இத்தொடரில் தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ், பவானி தன்னோட பாரம்பரியத்தையும் உரிமையையும் காப்பாத்த எதையும் செய்யத் தயங்காத பெண். அவள் எடுக்கிற முடிவுகளும், சந்திக்கிற சவால்களும்தான் இந்தக் கதாபாத்திரத்தை சுவாரசியமாக்குது. ராதிகா ஆப்தேவுடன் சேர்ந்து நடித்தது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. பவானிக்கும் ருத்ராவுக்கும் இருக்கும் மோதல் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு போகும். பவானி கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன் என்று பேசியுள்ளார்.
ராதிகா ஆப்தே, ருத்ரா தைரியமும் லட்சியமும் கொண்ட பெண். தனக்கு எதிராக இருக்கும் சூழ்நிலைகளைக் கண்டு அவள் பயப்பட மாட்டாள். இந்தத் தொடரில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்தனியான எண்ணங்களும் நோக்கங்களும் இருப்பது கதையை சுவாரசியமாக்குகிறது. கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தத் தொடருக்கு ரசிகர்கள் எப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
