மிஷ்கின் எனக்கு அப்பா மாதிரி!.. விமர்சனங்களுக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி..

 
keerthi suresh


தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்ற டோரதி படத்திலும் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சத்தியவான் சாவித்திரி திரைப்படம் வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இயக்குனர் மிஷ்கினும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்..

keerthi

இந் பட விழாவில் பேசிய மிஷ்கின் டோரதில் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி பேசி அவருக்கு ஒரு தங்க மோதிரமும் பரிசளித்தார். அப்போது கீர்த்தி சுரேஷின் முழங்கால் பகுதியில் அவர் கை வைத்ததாகவும் அது கீர்த்தி சுரேஷுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் ‘முதலில் என் முகத்தில் எங்கே அசௌகரியம் தெரிந்தது? அவரும் நானும் தந்தை - மகள் போன்ற உறவை பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Murugan ..
Murugan ..

5175 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web