×

ஃபோர்ப்ஸ் இதழால் துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ்... அடுத்த லேடி சூப்பர்ஸ்டாரா?

30 வயதுக்குள் சாதித்த 30 பேர் பட்டியலில் இணைத்து நடிகை கீர்த்தி சுரேஷை ஃபோர்ப்ஸ் இதழ் கௌரவப்படுத்தியுள்ளது.
 
 

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள கீர்த்தி, இப்போது மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பட்லா பட ஷூட்டிங்கில் துபாயில் பிஸியாக இருக்கிறார். 

இந்தநிலையில், பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் கீர்த்தி சுரேஷுக்குப் புதிய கௌரவத்தைக் கொடுத்துள்ளது. அந்த இதழ் வெளியிட்டுள்ள 30 வயதுக்குள் சாதித்த 30 பிரபலங்கள் பட்டியலில் 28 வயதான கீர்த்தி சுரேஷையும் சேர்த்து கௌரவப்படுத்தியிருக்கிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தென்னிந்திய பிரபலம் கீர்த்தி சுரேஷ் மட்டும்தான். ஆண்டுதோறும், ஆன்லைன் பரிந்துரை, ஜூரிக்களின் பட்டியல் மற்றும் ஃபோர்ப்ஸ் குழுவின் ஆய்வு என மூன்று கேட்டகிரியில் 30 வயதுக்குள் சாதித்த 30 இளம் சாதனையாளர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் இணைத்து தனக்குக் கௌரவத்தை ஃபோர்ப்ஸ் இதழ் அளித்திருப்பதற்கு கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News