×

ஆதிபுருஷ் படத்தில் இந்த பாலிவுட் நடிகை தான் ஹீரோயின்!

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் கியார அத்வானி ஒப்பந்தம்

 

பாகுபலிக்கு பின்னர் பிரபாஸின் மார்க்கெட் அதிறி புதிறியாக எகிறியுள்ளது. இதனால் அவரை வைத்து இந்தியா முழுவதும் வியபாரம் செய்யும் படங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி பிரபாஸ் ராமனாக நடிக்க இருக்கிறார்.

3 டியில் உருவாகும் இந்த படத்தில் லங்கேஷ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு இதுவரை வழங்கப்படாத சம்பளமாக 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கீர்த்திக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை கியார அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த ரோலுக்கு கீர்த்தி சுரேஷை விட கியார பொருத்தமாக இருப்பார் என்பதால் இயக்குனர் இப்படி ஒரு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News