அவனை கட்டிபிடுச்சு உம்மா கொடுத்து ஒரு வழி பண்ணிடுறாங்க கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் செல்ல நாய் குட்டியை கட்டியணைத்து உம்மா கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். கீர்த்தி குட்டி நாயுடன் எப்போதும் மிகவும் பிரியமாக இருப்பார். பொங்கல், தீபாவளி தினங்களில் அதற்கும் புது ஆடைகளை போட்டு அழகு பார்ப்பார்.