×

கீர்த்தி சனோன் இடத்தில் கீர்த்தி சுரேஷ்.. இரு மொழியில் வெளியாகும் படம்..!!

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.

 
Keerthi suresh

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இவர் தற்போது ஹிந்தி படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியான படம் ‘மிமி’. இது 2011ல்  மராத்தி மொழியில் வெளியான ‘மலா அய் ஹய்ச்சி’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். 

Kriti Sanon
Kriti Sanon

லக்‌ஷ்மண் உடேகர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. 

இதில் நாயகியாக நடித்த கீர்த்தி சனோன் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இந்நிலையில், மிமி படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மொழிகளிலுமே கீர்த்தி சனோன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

Keerthi suresh
Kerthi suresh

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷுக்கு தமிழ், தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளதால் அவர் இதில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News