Categories: Cinema News latest news

ரஜினி படத்தில் நடித்ததும் சம்பளத்தை உயர்த்திய இளம் நடிகை….

தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தற்போது தமிழில் மார்க்கெட் சற்று டவுனாகவே உள்ளது. அவர் கைவசம் உள்ள ஒரே ஒரு தமிழ் படம் என்றால் அது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தான். இப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவே நடித்துள்ளார்.

rajini_keerthi suresh

ஆனால் கீர்த்திக்கு தமிழில் மார்க்கெட் டல் தெலுங்கில் அவர் மார்க்கெட் டாப்பில் உள்ளது. தெலுங்கு சினிமாவில் கீர்த்தி கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளாராம். அந்த வகையில் தற்போது மகேஷ் பாபு ஜோடியாக சர்க்காரு வாரி பாட்டா படத்திலும், வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியுடனும் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களை தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் நானி ஜோடியாக இரண்டாவது முறையாக தசரா என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சுமார் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

keerthi suresh

தமிழில் ரஜினிகாந்த், தெலுங்கில் மகேஷ் பாபு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதால் கீர்த்தி சுரேஷ் அவரது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். உண்மையில் அவர் 3 கோடிக்கும் அதிகமாக தான் கேட்கிறாராம். இருப்பினும் 3 கோடிக்கு கீழ் ஒரு ரூபாய் கூட குறைவாக நடிக்க மாட்டேன் என கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகைகளிலே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் அதிகபட்சமாக 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மற்ற நடிகைகளின் சம்பளம் நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட குறைவு தான். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளது மற்ற நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram