தி பாரடைஸில் குத்தாட்டம் போட கீர்த்தி சுரேஷுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். முதல் படம் பெறிய வெற்றியை
 
keerthi suresh

இயக்குனர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். முதல் படம் பெறிய வெற்றியை கொடுக்காவிட்டாலும் அடுத்து வந்த ரஜினி முருகன் அவரை முன்னணி இடத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து ரெமோ, விஜயுடன் பைரவா, சர்கார், சூர்யாவுடன்  தானா சேர்ந்த கூட்டம், ரஜினியுடன் அண்ணாத்த என முன்னணி நடிகர்களின் படங்களில் மளமளவென படங்களில்  நடித்தார். கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நானி நடிப்பில் வெளியாக உள்ள தி பாரடைஸ்  படத்தில் கீர்த்தி சுரேஎஷ் ஒரு பாடலுக்கு குத்தாடட்டம் போட்டுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள அந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட ரூ. 1.50 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


 

Tags

From Around the web