×

ஜோரா இருக்கீங்க... புது மாப்பிள்ளையுடன் க்ளோஸ் அப்பில் கீர்த்தி சுரேஷ்!
 

நெருங்கிய நண்பரின் திருமண கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ் 
 

தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலேஜ் நண்பரின் திருமணத்தில் கலந்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிங்க் & சில்வர் காம்பினேஷனில் அழகிய பட்டுப்புடவை அணிந்துக்கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News