×

கீர்த்தி சுரேஷ் சுட்ட தோசைக்கு நீங்களே பேரு வச்சிட்டு போங்கப்பா - வீடியோ!

தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

 

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

சமீப நாட்களாகவே உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தற்போது வரலாற்று திரைப்படமான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சாக்லேட் தோசை சுட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்

இதனை கண்ட ரசிகர்கள் இதை பார்க்கும்போதே குமட்டிகிட்டு வருது எப்படி சாப்பிடுவீங்க என ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் கற்பூர வாசனை கழுதைக்கு தெரியுமா என பதிலடி கொடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News