இப்போவும் விஜய் சார் எனக்காக அதை பண்ணுவாரு.... கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!
கீர்த்தி சுரேஷ்:
பிரபலமான நட்சத்திரம் நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவர் சினிமா துறை குடும்பத்தில் பிறந்த வளர்ந்ததால் குழந்தை நட்சத்திரமாகவே திரைப்படங்களில் நடித்து வந்தார் .
முதன்முதலில் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் ரஜினி முருகன், தொடரி, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி, சண்டக்கோழி 2 ,சீமராஜா, அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

விஜய் உடன் முதல் சந்திப்பு:
கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் பாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதில்... நான் விஜய் சாரை இப்போது பார்த்தாலும் முதல் முறையாக எப்படி அவரை சந்தித்தேனோ அதே மரியாதை, அதே பணிவு அப்படியே இருக்கும். நான் இப்பவும் அவரை பார்க்கும்போது ஒரு எக்சைட்டோட தான் பார்ப்பேன்.
பயம் , மரியாதை:

ஒரு பயத்தோட தான் அவங்களை மீட் பண்ணுவேன். அதே மாதிரி தான் ஜெயம் ரவி சார், ரஜினி சார் இவங்க எல்லாருமே அடுத்தவர்களுக்கு மரியாதை அவ்வளவு அழகாக கொடுப்பார்கள். அதனால் மரியாதை அவர்கள் மீது அதிகரிக்கும் என கீர்த்தி சுரேஷ் பேசியிருக்கிறார். விஜய் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
