×

கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா சாதிக்காததை சாதிப்பாரா நயன்தாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

 

நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

கொரோனா லாக்டவுனால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படங்கள் ஓடிடியில் ரிலீஸாக ஆரம்பித்தன. இதில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்டு உருவான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் மற்றும் அனுஷ்காவின் சைலன்ஸ் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தன. இந்த படங்களெல்லாம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் இரண்டாவது காட்சியே தூக்கப்பட்டு இருக்கும் என ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு மொக்கையாக இருந்தன.

இந்நிலையில் இப்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படமும் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்த படமாவது நல்ல வெற்றியைப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News