×

அனிருத்தைத் திருமணம் செய்யப் போகிறாரா கீர்த்தி சுரேஷ்... உண்மை என்ன?

இசையமைப்பாளர் அனிருத்தும் நடிகை கீர்த்தி சுரேஷும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாகப் பரவி வருகிறது. 
 
 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், மகேஷ் பாபுவுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்குக்காக துபாயில் இருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி, தான் நடிக்கும் படங்கள் குறித்தும், சுற்றுலா உள்ளிட்ட ஹாஃபிக்கள் குறித்தும் பகிர்வதுண்டு. இவர், செல்வராகவன் நடிக்கும் `சாணிக் காயிதம்’, ரஜினியுடன் அண்ணாத்த ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

இசையமைப்பாளர் அனிருத்தும் கீர்த்தி சுரேஷும் நெருங்கிய நண்பர்கள் என்பது கோலிவுட்டில் ஊரறிந்த ரகசியம். இந்தநிலையில், `இருவரும் தங்களது நட்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துவிட்டனர். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்’ என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. ஆனால், இந்தத் தகவல் சுத்த ஹம்பக்... உண்மையில்லை; வதந்தி என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள். இருவரும் நல்ல நண்பர்கள். தற்போது அவரவர் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள். இதுபோன்ற தகவல்கள் ஏன் பரப்பப்படுகின்றன... அதனால் அவர்களுக்கு என்ன பலன் ஏற்படப்போகிறது என்றெல்லாம் ஆதங்கப்படுகிறார்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள்.   

From around the web

Trending Videos

Tamilnadu News