Categories: Cinema News latest news

உங்க வயசுக்கு மீறிய ஆசை… கீர்த்தி ஷெட்டியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…

நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் உப்பேன்னா திரைப்படம் மூலம் இந்திய திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த ஒரே படத்தின் மூலம் அவர் மிகவும் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தில் நடித்துள்ளார். அடுத்து பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அந்த வகையில், இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், 18 வயதான கீர்த்தி ஷெட்டி ராம் பொதினேனியுடன் இணைந்து தனது படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருந்து வருகிறார்.  நேற்று கூட இப்படத்தின் விளம்பரத்தின் ஒரு பகுதியாக படக்குழு சென்னை வந்தனர்.

இதையும் படிங்களேன் – சிறுமியிடம் பாலியல் சீண்டல்… பிரபல மலையாள நடிகர் போக்ஸோவின் கீழ் அதிரடி கைது..

சமீபத்தில், இவர் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த நடிகர் யார் என்று கேட்டதற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் ரொம்ப புடிக்கும் என்று பதிலளித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனை, பார்த்த ரசிகர்கள் உங்க வயசு என்ன அவர் வயசு என்ன என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Manikandan
Published by
Manikandan