Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜயுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்? – தளபதி 67 புதிய அப்டேட்

விஜயுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்? – தளபதி 67 புதிய அப்டேட்

4af4adf142bbadbccc079a5b56091353

விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, கோலமாவு கோகிலா, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 

இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பின் விஜயின் 66வது திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

299854d7213808d32ed8e4a74a962d75

இந்த படத்திற்கு பின் விஜய் ஒரு பேன் இண்டியா படத்தில் நடிக்கவுள்ளார். அதாவது, விஜய் இதுவரை தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடித்திருக்கவில்லை. இந்நிலையில், தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தனது 67வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை நாகார்ஜுனா- கார்த்தி ஆகியோரை வைத்து தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் எனக்கூறப்படுகிறது. இப்படம் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.,

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ் பாபு போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். எனவே, தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களுக்கும் அவர் பரிச்சயம் என்பதால் அவர் நடிப்பார் என கருதப்படுகிறது. 

d54e5a2afe3f0d8746b932932ce9f72f

மேலும், விஜயுடன் பைரவா, சர்கார் என 2 படங்களில் ஏற்கன்வே கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஒருவேளை நெல்சன் படத்திற்கு பின் தில் ராஜ் பிராஜக்ட் ஓகே ஆனால், விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படமாக தளபதி 66 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top