தனது தனித்துவமான திரைப்படங்கள் மூலம் நல்ல இயக்குனராக வலம் வருகிறார் செல்வராகவன். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் இவர். ஆனால், என்ன ஒரு துரதிர்ஷ்டம் என்றால் இவரது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது தோல்வியை தழுவுகிறது. ஆனால் அது பல வருடங்கள் கழித்து அது ஒரு மாஸ்டர் பீஸ் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
அப்படித்தான் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற திரைப்படங்கள் தற்போது ரசிகர்களால் ஆகா ஓகோ என்று கொண்டாடப் பட்டு வருகிறது. இவர் நானே வருவேன் எனும் திரைப்படத்தை தனுஷை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார்.
அதுபோக பீஸ்ட், சாணி காயிதம் போன்ற திரைப்படங்களில் நடித்து நல்ல நடிகராகவும் வலம் வரத் தொடங்கி விட்டார். இதில் சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் முதன்மையான வேடத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.
இதையும் படியுஙங்களேன் – அடுத்த அசுரனாக மாறிவரும் ஐஸ்வர்யா ரஜினி.! வீடியோவில் வியர்க்க வியர்க்க என்னென்ன செய்றார் பாருங்க…,
அப்போது கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த அனுபவம் பற்றி அண்மையில் ஒரு வீடியோவில் செல்வராகவன் கூறியிருந்தார். அதாவது, கீர்த்தி சுரேஷ் மற்ற சமயங்களில் நார்மலாக இருக்கிறாராம். அதுவே ஷாட் ரெடியானதும் அப்படியே கதாபாத்திரம் பொன்னியாக மாறிவிடுவாராம்.
அது எப்படி உடனே மாறிவிடுவீர்கள்? என்று எனக்கும் கொஞ்சம் சொல்லித் தாருங்கள், என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷிடம் செல்வராகவன் எவ்வளவோ கெஞ்சி கேட்டு பார்த்தாராம். ஆனால், இறுதிவரை அந்த நடிப்பு திறனை கீர்த்தி சுரேஷ் சொல்லித்தரவில்லையாம். இதனை வருத்தத்துடன் செல்வராகவன் அந்த இன்டெர்வியூவில் பதிவிட்டு இருந்தார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…