திருப்பதிக்கு தனது கணவருடன் சென்று சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் ஸ்டில்ஸ்!

 
Keerthy suresh antony Thattil tirupati

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆரம்பத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர், இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை டிக் அடித்து நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'சத்தியவான் சாவித்திரி'.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரவீன்.எஸ்.விஜய் இயக்கியுள்ளார். இதில் முக்கிய வேடத்தில் இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற ஜூலை மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது கணவர் ஆண்டனி தட்டிலுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Keerthy Antony Thattil tirupati 1

Keerthy Antony Thattil tirupati 2

Keerthy Antony Thattil tirupati 3

Keerthy Antony Thattil tirupati 2

Keerthy Antony Thattil tirupati 4

From Around the web