எதிர்பார்ப்பை எகிற வைத்த கீர்த்தி சுரேஷின் டோரதி டீசர்!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'சத்தியவான் சாவித்திரி, டோரதி' என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் 'சத்தியவான் சாவித்திரி' படத்தை பிரவீன்.எஸ்.விஜய் இயக்கியிருக்கிறார்.
'டோரதி' படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இது அவருக்கு இயக்குநராக 10-வது படமாம்.
இதில் சனந்த், ரிஷிகாந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். நேற்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
Happy to unveil the teaser of Dorothy ! @karthiksubbaraj’s 10th film attains a monumental achievement of being selected by @TIFF_NET👏🏽
— Dhanush (@dhanushkraja) August 5, 2026
You’ve made Tamil Cinema proud dear Karthik !
🔗 - https://t.co/rZoWaBYvQM
Worldwide Release - Sep 25th, 2026 !! @ilaiyaraaja @Sananth__…
இன்று படத்தின் டீசரை நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர ப்ளான் போட்டுள்ளனர்.
