×

பக்தி பழமா மாறிய கீர்த்தி சுரேஷ்... வைரல் புகைப்படம்!
 

திருப்பதி கோவிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் 
 
 

தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்தபடியே எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ஒரு ஹீரோயின் என்ற பந்தாவே இல்லாமல் நம்ம பக்கத்துவீட்டு பொண்ணு போல சிம்பிளாக இருக்கும் கீர்த்தியின் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் நிறைவேற வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News