×

நிமிஷத்து நிமிஷம் மாத்துறியேம்மா... ட்ரடீஷ்னலில் தாக்கும் கீர்த்தி சுரேஷ்!
 

கலர் கலரா புடவை கட்டி வித விதமாய் போஸ் கொடுத்த  கீர்த்தி சுரேஷ்!
 
 
நிமிஷத்து நிமிஷம் மாத்துறியேம்மா... ட்ரடீஷ்னலில் தாக்கும் கீர்த்தி சுரேஷ்!

ஹோம்லி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். கடைசியாக மிஸ் இந்திய படத்தில் நடித்தார். 

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்தி வரும் கீர்த்தி சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் கலர் கலரா சேலைகளை உடுத்திக்கொண்டு வித விதமாய் போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளி ரசிகர்களின் ரசனை மழையில் நனைந்து வருகிறார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News