16 வருஷம் காதலித்து வந்தோம் - ரகசியம் உடைத்த கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ்:
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவரான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்னதாகவே 2000ம் கால கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
அதன் பிறகு தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து விஜய் , சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன், ரஜினி, விஷால், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

ரகசிய காதல்:
இந்நிலையில் தன்னுடைய திருமணம் மற்றும் கணவருடனான காதல் பயணங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் நான் முதன் முதலில் அவரை 2009 ஆம் ஆண்டு தான் சந்தித்தேன் .
அதன் பிறகு 2010 ஆம் வருஷத்துல அதாவது நான் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும்போதே டேட்டிங் பண்ண ஆரம்பிச்சிட்டோம். கிட்டத்தட்ட 16 வருஷம் நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். அதன் பின்னர் தான் திருமணம். ஆனால் இந்த விஷயம் வெளியில் கொஞ்சம் கூட கசியாமல் மிகவும் ரகசியமாக பார்த்துக் கொண்டேன் என அந்த பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.
