×

நான் என்னையே வெறுத்தேன்... கீர்த்தி சுரேஷின் சகோதரி வேதனை
 

உடல் எடை அதிகம் இருந்ததால் தன்னையே வெறுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷ் உருக்கமாகப் பேசியிருக்கிறார். 
 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் பூர்வீகம் கேரளா. அம்மா மேனகா சுரேஷ் நடிகையாக இருந்தாலும், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால், அதை மகள் கீர்த்தி மூலம் மேனகா நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான `மகாநடி’ படத்துக்கு கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கி தாயைப் பெருமைப்படுத்தியிருக்கிறார். 


ஆனால், மேனகாவின் மூத்த மகள் ரேவதி சுரேஷ் தனது உடல் எடையால் பல இடங்களில் அவமானப்பட்டதாக சோஷியல் மீடியாவில் வேதனை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் ரேவதி சுரேஷ், ``என்னுடைய வாழ்நாள் முழுவதும் உடல் எடையைக் கண்ட்ரோல் செய்வதில் நான் கஷ்டப்பட்டிருக்கிறேன். தங்கை மற்றும் எனது தாயுடன் என்னை ஒப்பிட்டு பல இடங்களில் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக ஒரு பெண் தங்கை கீர்த்தியையும் அம்மாவையும் புகழ்ந்து பேசினார். நான் அவருக்கு நன்றி சொன்னேன். உடனே, `உனது தாயும் தங்கையும் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். உனக்கு மட்டும் என்னாச்சு...’ என அவர் கேட்ட கேள்வி என்னை மிகவும் பாதித்தது. 


உடல் எடையைக் குறைக்க வேண்டும் என மிகக் கடினமாக முயற்சி செய்தேன். கண்ணாடி முன் பல மணி நேரம் நின்றுகொண்டு நான் அழுதிருக்கிறேன். ஒரு கட்டத்தில் என்னை நானே வெறுத்தேன். இப்போது கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைத்து வருகிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ், ``அப்படிப் போடு... லவ்..லவ்..லவ்.. உன்னால் பெருமைப்படுகிறேன்’’ என்று மகிழ்ச்சியாக கமெண்ட் அடித்திருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News