சூப்பர் ஹிட்டான முதல் பாகம்... 'யூத் 2'-வை எடுக்கப்போகும் கென் கருணாஸ்!

 
Youth 2

நடிகர் கென் கருணாஸ் ஆல்ரெடி 'அசுரன், விடுதலை 2, வாத்தி' போன்ற படங்களில் நடித்திருந்தாலும், சோலோ ஹீரோவாக இவர் நடித்த முதல் படம் 'யூத்' தான். இதில் நடித்தது மட்டுமின்றி, இயக்குநர் சீட்டில் அமர்ந்து ஆக்ஷன் கட்டும் சொன்னார்.

இந்த ஆண்டு (2026) மார்ச் மாதத்தில் வெளிவந்த இப்படத்தில் மீனாக்ஷி தினேஷ், அனிஷ்மா அனில்குமார், பிரியான்ஷி யாதவ், சூரஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி நடித்திருந்தார்கள். 

இந்த படம் இளைஞர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது, கென் கருணாஸ் இப்படத்தின் பார்ட் 2-வை எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

முதல் பாகத்தில் ஸ்கூல் லைஃபில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் இரண்டாம் பாகம் காலேஜ் லைஃபாம். இதை கென்னின் தந்தையும், பிரபல நடிகருமான கருணாஸ் தயாரிக்கவுள்ளார்.

From Around the web