Youth: கென் கருணாஸுக்கு இவ்ளோதான் சம்பளமா?!.. ஐயோ பாவம்..
தமிழில் காமெடி படங்களில் நடித்து தற்போது குணச்சித்திர நடிகராக மாறியிருக்கும் கருணாஸின் மகன் கென் கருணாஸ். அசுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் வெற்றி மாறன், தனுஷ் ஆகியோரிடம் உதவி இயக்குனராகவும் இவர் பணி புரிந்திருக்கிறார்.
அந்த நம்பிக்கையில் ஒரு கதையை எழுதி யூத் என தலைப்பு வைத்து அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் மீனாக்ஷி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுரேஷ் வஞ்சரமுடு, தேவதர்ஷினி சுகுமாரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்..
இந்த படத்தில் இடம் பெற்ற முட்டக்கலக்கி பாடல் படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக ஜென்சி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள் 5 கோடி செலவில் உருவான இந்த படம் உலகமெங்கும் 85 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான், இந்த படத்திற்கு கென் கருணாஸுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே சம்பளம் பேசினார்களாம். அதோடு லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு என்கிற அடிப்படையில் அவருக்கு தற்போது இரண்டு கோடி மட்டுமே அதிகமாக கிடைக்கும் என்கிறார்கள். இதில் தயாரிப்பாளருக்கு மட்டுமே 30 கோடி லாபம் என்கிறார்கள்.
