ஹீரோயினா அறிமுகம் ஆகும் கெனிஷா - ஹீரோ யார் தெரியுமா?
பாடகி கெனிஷா:
பின்னணி பாடகியும் நடிகர் ஜெயம் ரவியின் காதலியும் ஆன கெனிஷா தற்போது திரைப்படத்துறையில் ஹீரோயின் ஆக அறிமுகமாக இருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்திருக்கிறது. ஆம் மலையாள சினிமாவில் "மட் ஃபிஷ்" என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாக இருக்கிறாராம்.

ஜிதின் ஐசக் தாமஸ் இயக்கி, நடிகர் சன்னி வெய்ன் நடிக்கும் மலையாளத் திரைப்படமான இந்த திரைப்படத்தில் பின்னணி பாடகியாகவும் கெனிஷா பாடல் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் இசை முக்கிய பங்காற்றுகிறது. கெனிஷாவின் பங்களிப்பு இந்த திரைப்படத்தின் உணர்ச்சிகரமான ஆழத்தையும் அழகையும் சேர்க்கும் என ரசிகர்கள் பட குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.
முதல் திரைப்படம்:
கெனிஷா ஹீரோயினாக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்காக கெனிஷாவின் முதல் பயணத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
