சமூக வலைதளங்களுக்கு கம்பேக் கொடுத்த கெனிஷா

நடிகர் ரவி மோகன் தோழியும் பாடகியுமான  கெனிஷா மீண்டும் சமூக வலைதளங்களில் மீண்டும் ஆக்டிவாகியிருப்பது ரசிகர்களுக்கு
 
kenishaa

நடிகர் ரவி மோகன் தோழியும் பாடகியுமான  கெனிஷா மீண்டும் சமூக வலைதளங்களில் மீண்டும் ஆக்டிவாகியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாகவும், சென்னையை விட்டு வெளியேற்றுவதாகவும் அறிவித்திருந்தார். அந்த சமயம் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது மனக்குமுறல்களை கொட்டி தீர்த்தார்.

kenishaa


இந்த நிலையில் கெனிஷா சமூக வலைதளத்திற்கு கம்பேக் கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,  அமைதியான மனதுடனும், ஆழமான நோக்கத்துடனும் நான் மீண்டும் வருகிறேன்  என்று பதிவிட்டுள்ளார்.  கெனிஷா, நடிகர் ரவி மோகன் உடன் நெருக்கமான நட்பில் இருந்ததாக கூறப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால், அவர்களைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web